/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 12 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் சிக்கினார் 12 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் சிக்கினார்
12 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் சிக்கினார்
12 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் சிக்கினார்
12 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் சிக்கினார்
ADDED : ஜூலை 10, 2024 12:37 AM

ஆலந்துார்,சென்னை, கோடம்பாக்கம், பவர்ஹவுஸ் பகுதியை, மவுன்ட் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் தலைமையிலான குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். சந்தேகத்திற்கு இடமான முறையில், சிறிய மூட்டையுடன் சுற்றி வந்த நபரை மடக்கி சோதனையிட்டனர். அவரிடம், 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அவர், தஞ்சாவூர், பத்மநாபா நகரை சேர்ந்த வீரமணி, 36, என்பது தெரியவந்தது. அவர் ஆந்திராவில் இருந்து ரயில் வாயிலாக கஞ்சா கடத்தி வந்து, கோடம்பாக்கம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், சூளைமேடு, பகுதிகளில் சில்லரை விற்பனை செய்து வந்துள்ளார்.
அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.