ராமாபுரத்தில் நள்ளிரவில் மின் தடை
ராமாபுரத்தில் நள்ளிரவில் மின் தடை
ராமாபுரத்தில் நள்ளிரவில் மின் தடை
ADDED : ஜூலை 12, 2024 12:20 AM
ராமாபுரம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதில், வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம் தமிழ் நகரில், மரம் ஒன்று சரிந்து விழுந்தது.
இம்மரம் மின் கம்பி மீது விழுந்ததால், ராமாபுரம் பகுதியில், நேற்று நள்ளிரவு மின் தடை ஏற்பட்டது.
மரத்தை அப்புறப்படுத்திய பின், அதிகாலை, 2:30 மணியளவில் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
நள்ளிரவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அவதிப்பட்டனர். மழை விட்டும் மின் இணைப்பு வழங்கப்படாததால், பகுதிமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து அமர்ந்திருந்தனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மரம் சரிந்து மின் கம்பி மீது விழுந்ததால், மின் தடை ஏற்பட்டது. அடுத்த வாரத்திற்குள், மின் கம்பி மீது சாய்ந்துள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளோம்' என்றனர்.