ADDED : ஜூலை 12, 2024 12:21 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
ஆளவந்தார் ஆஸ்தானம், காலை 8:30 மணி. பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு, மாலை 4:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
கற்பகாம்பாள் கோவில் பிரஹார ஊஞ்சல் விழா, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
குருவாயூரப்பன் கோவில்
கும்பாபிஷேகம் முன்னிட்டு, ஆறாம் கால பூஜைகள், மகா தீபாராதனை, காலை 5:00 மணி முதல். பரிவார மூர்த்திகள் உத்தர குருவாயூரப்பன் கோவில் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேம், காலை 8:00 மணி. இடம்: நங்கநல்லுார்.
ஸ்ரீ பாலசுப்ரமணிய சங்கத்தின் சங்கீத உபன்யாசம், மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
மண்டல பூஜை
அபிஷேக ஆராதனை - காலை 6:00 மணி. மண்டல பூஜை மாலை 6:00. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், சித்தாலபாக்கம் வழி. அரசன்கழனி.
பொது
கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.
இலவச யோகா பயிற்சி
சத்யானந்தா யோக மையம் சார்பில், இலவச யோகா வகுப்பு, காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி மற்றும் பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார்.