/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.31.58 லட்சத்தை வட்டியுடன் தர வி.ஜி.என்., நிறுவனத்திற்கு உத்தரவு ரூ.31.58 லட்சத்தை வட்டியுடன் தர வி.ஜி.என்., நிறுவனத்திற்கு உத்தரவு
ரூ.31.58 லட்சத்தை வட்டியுடன் தர வி.ஜி.என்., நிறுவனத்திற்கு உத்தரவு
ரூ.31.58 லட்சத்தை வட்டியுடன் தர வி.ஜி.என்., நிறுவனத்திற்கு உத்தரவு
ரூ.31.58 லட்சத்தை வட்டியுடன் தர வி.ஜி.என்., நிறுவனத்திற்கு உத்தரவு
ADDED : ஜூலை 12, 2024 12:20 AM
சென்னை, சென்னை கிண்டி தொழிற்பேட்டையில், வி.ஜி.என்., நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் வீடு வாங்க, வள்ளி என்பவர், 2017ல் ஒப்பந்தம் செய்தார். இதற்காக அவர், பல்வேறு தவணைகளில், 31.58 லட்சம் ரூபாயை, கட்டுமான நிறுவனத்திற்கு செலுத்தினார். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, 2019ல் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைத்து இருக்க வேண்டும்.
ஆனால் அந்த நிறுவனம், கட்டுமான பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என்பதால், வீடு ஒப்படைப்பில் தாமதம் ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட வள்ளி, வீடு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள விரும்பினார்.
இதுகுறித்து, வள்ளி, வி.ஜி.என்., நிறுவனத்திற்கு முறையாக தெரிவித்தும், அவர்கள் இதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால், பணம் செலுத்திய வள்ளி, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர் சுனில்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட கால கெடுவுக்குள், கட்டுமான நிறுவனம், வீட்டை மனுதாரருக்கு ஒப்படைக்கவில்லை. கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையிலும், கட்டுமான நிறுவனம் பணிகளை முடித்து வீட்டை ஒப்படைக்கவில்லை.
இதனால், மனுதாரர் கோரியபடி, அவர் செலுத்திய, 31.58 லட்சம் ரூபாயை வட்டியுடன் கட்டுமான நிறுவனம் திருப்பித்தர வேண்டும்.
இதையடுத்து, வீடு வாங்குவதற்கான ஒப்பந்தம், கட்டுமான ஒப்பந்தம் ஆகியவற்றை ரத்து செய்ய மனுதாரர் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து, வி.ஜி.என்., நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.