/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆக்சிஜன் அதிகரிக்க மரம் வளர்ப்போம் இறையன்பு வேண்டுகோள் ஆக்சிஜன் அதிகரிக்க மரம் வளர்ப்போம் இறையன்பு வேண்டுகோள்
ஆக்சிஜன் அதிகரிக்க மரம் வளர்ப்போம் இறையன்பு வேண்டுகோள்
ஆக்சிஜன் அதிகரிக்க மரம் வளர்ப்போம் இறையன்பு வேண்டுகோள்
ஆக்சிஜன் அதிகரிக்க மரம் வளர்ப்போம் இறையன்பு வேண்டுகோள்
ADDED : ஜூன் 10, 2024 01:59 AM
கண்ணகிநகர்:வனத்துறை சார்பில், பசுமை துாதுவர் பயிற்சி முகாம் கண்ணகிநகர், முதல் தலைமுறை கற்றல் மையத்தில், நேற்று நடந்தது. இதில், பசுமை துாதுவர் 'லோகோ' வெளியிடப்பட்டது.
தமிழக முன்னாள் தலைமை செயலர் இறையன்பு லோகோ வெளியிட்டு பேசியதாவது:
காலநிலை மாற்றத்தால், ஆறு மாதம் பொழிய வேண்டிய மழை, ஒரே நாளில் பொழிகிறது. காற்று மாசடைந்து வருகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து பூமியை பாதுகாப்பது அவசியம்.
மரம் வளர்த்து பசுமையாக வைத்திருப்பதில் மட்டும் தான், இயற்கை ஆக்சிஜன் அதிகமாக கிடைக்கும்.
வீட்டை சுற்றி மரம் வளர்ப்பதை இளைஞர்கள் கடமையாக நினைக்க வேண்டும். இதற்கு, பசுமை துாதுவர் திட்டம் பயன் அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாகு, தலைமை வன பாதுகாவலர் சுதான்சு குப்தா, சதுப்பு நிலம் திட்ட இயக்குனர் தீபக் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, காலநிலை மாற்றம் அதன் தாக்கம், கழிவு மேலாண்மை, நீர்நிலை முக்கியத்துவம், பிளாஸ்டிக் தடை உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி நடந்தது.