ADDED : ஜூன் 10, 2024 01:59 AM
துரைப்பாக்கம்:ஓ.எம்.ஆரில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் கழிவுநீர் குழாய், வடிகால், நீர்நிலைகளில் அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு அதிகரிக்கிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், 50க்கும் மேற்பட்ட கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். இதில், 195வது வார்டில், சில கடைகளுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து, 30 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.