/உள்ளூர் செய்திகள்/சென்னை/போதை பொருள் சப்ளை ஐ.டி., ஊழியர் சிக்கினார்போதை பொருள் சப்ளை ஐ.டி., ஊழியர் சிக்கினார்
போதை பொருள் சப்ளை ஐ.டி., ஊழியர் சிக்கினார்
போதை பொருள் சப்ளை ஐ.டி., ஊழியர் சிக்கினார்
போதை பொருள் சப்ளை ஐ.டி., ஊழியர் சிக்கினார்
UPDATED : மார் 12, 2025 02:56 AM
ADDED : மார் 11, 2025 07:48 PM
கீழ்ப்பாக்கம்:ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து மெத் ஆம்பெட்டமைன் விற்கப்படுவதாக, கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசாரின் விசாரணையில், திருமுல்லைவாயல், செந்தில் நகரில் தங்கி, வேளச்சேரியில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் ரிக்கி ஆண்டனி, 30, என்பவர் சிக்கினார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து, ஐ.டி., ஊழியர்களுக்கு வினியோகம் செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 3.54 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.