ஆங்கில பயிற்சி பெற 'தாட்கோ' அழைப்பு
ஆங்கில பயிற்சி பெற 'தாட்கோ' அழைப்பு
ஆங்கில பயிற்சி பெற 'தாட்கோ' அழைப்பு
ADDED : மார் 11, 2025 07:47 PM
சென்னை:மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில பயிற்சி பெற, 'தாட்கோ' அழைப்பு விடுத்துள்ளது.
'தாட்கோ' எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தால், பல்வேறு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தவகையில், மருத்துவம் சார்ந்த தொழில்களுக்கு ஆங்கில பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்கு, ஆதிதிராவிடர், பழங்குடியினராக மட்டுமே இருக்க வேண்டும். பி.எஸ்சி., - எம்.எஸ்சி., நர்சிங், பொது செவிலியர் போன்ற மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்று, 21 - 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
பயிற்சிக்கு பின், வேலைவாய்ப்பு வழங்கப்படும். பயிற்சியில் சேர, www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.