/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஹெராயின் கடத்தியவர் சிறுமியுடன் கைது ஹெராயின் கடத்தியவர் சிறுமியுடன் கைது
ஹெராயின் கடத்தியவர் சிறுமியுடன் கைது
ஹெராயின் கடத்தியவர் சிறுமியுடன் கைது
ஹெராயின் கடத்தியவர் சிறுமியுடன் கைது
ADDED : மார் 11, 2025 08:53 PM
திருவான்மியூர்:திருவான்மியூர் ரயில் நிலையம் அருகில், ஒரு வாலிபர் ஹெராயின் கடத்தி வருவதாக, தரமணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுகைல் உசேன், 22, மற்றும் 17 வயது சிறுமியை பிடித்தனர்.
சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுகைல் உசேன், அடிக்கடி திரிபுரா சென்று, போதைப்பொருள் கடத்தி வருவது தெரிந்தது.
சுகைல் உசேனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர். இருவரிடமிருந்து, 130 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.