/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறப்பு டிசைன் புடவைகள் கோ--- - ஆப்டெக்ஸ் அறிமுகம் சிறப்பு டிசைன் புடவைகள் கோ--- - ஆப்டெக்ஸ் அறிமுகம்
சிறப்பு டிசைன் புடவைகள் கோ--- - ஆப்டெக்ஸ் அறிமுகம்
சிறப்பு டிசைன் புடவைகள் கோ--- - ஆப்டெக்ஸ் அறிமுகம்
சிறப்பு டிசைன் புடவைகள் கோ--- - ஆப்டெக்ஸ் அறிமுகம்
ADDED : ஜூன் 20, 2024 12:41 AM

சென்னை, நடப்பாண்டு பண்டிகை காலங்களில் புதிய டிசைன்களை வழங்கும் வகையில், சிறந்த வடிவமைப்பு ஜவுளிகளை தேர்வு செய்யும் நிகழ்வு, சென்னை, எழும்பூர் கோ- - ஆப்டெக்ஸ் வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில், தமிழகம் முழுதும், 600 நெசவாளர்கள் நெய்த பட்டு, காட்டன் புடவைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கோ- - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் ஆனந்தகுமார், தலைமை பொது மேலாளர் ஆலோக் பப்லே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
புதிய வடிவமைப்பில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை ஆகிய நான்கு பட்டுப் புடவைகள் தேர்வாகியுள்ளன. ராமநாதபுரம், -பரமக்குடி, சேலம் -ராசிபுரம், கோவை- நெகமம், திருச்சி- மணமேடு ஆகிய காட்டன் புடவைகளும் தேர்வாகியுள்ளன. மேலும், ஈரோடு- பெட் ஷீட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அவற்றை மொத்தமாக தயாரித்து வழங்க, ஆர்டர் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.