மின்னொளி கூடைப்பந்து லயோலா வெற்றி
மின்னொளி கூடைப்பந்து லயோலா வெற்றி
மின்னொளி கூடைப்பந்து லயோலா வெற்றி
ADDED : ஜூன் 20, 2024 12:40 AM
சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் சார்பில், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், சென்னை எழும்பூரில் நடக்கின்றன.
பகல் - இரவு ஆட்டமாக மின்னொளியில் நடந்த இப்போட்டியில் லயோலா, இந்தியன் வங்கி, வருமான வரித்துறை, எஸ்.டி.ஏ.டி., உட்பட ஆண்களில் 38 அணிகளும், பெண்களில் 16 அணிகளும் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான ஆட்டத்தில், லயோலா மற்றும் வி.கே.ஜெயராமன் அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியில், லயோலா அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 101 - 58 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஜேப்பியார் அணி, 73 - 38 என்ற கணக்கில், ஜவகர் நகர் அணியை வீழ்த்தியது. பெண்களில், எஸ்.டி.ஏ.டி., அணி, 65 - 38 என்ற புள்ளிக்கணக்கில், அரைஸ் அணியை தோற்கடித்தது.