/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரவுடிகள் இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்' ரவுடிகள் இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ரவுடிகள் இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ரவுடிகள் இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ரவுடிகள் இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 24, 2024 02:24 AM

புதுவண்ணாரப்பேட்டை:மணலியைச் சேர்ந்தவர் ரமேஷ், 20; பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், 28; பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இருவரும் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள். இவர்களை, ஏற்கனவே வழக்கு ஒன்றிற்காக புது வண்ணாரப்பேட்டை போலீசார், கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் காரணத்தால், வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் இளங்கோவன் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தனர்.
இதையடுத்து, இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.