/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வடிகால் துார்வாரும் பணிகள் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு வடிகால் துார்வாரும் பணிகள் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
வடிகால் துார்வாரும் பணிகள் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
வடிகால் துார்வாரும் பணிகள் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
வடிகால் துார்வாரும் பணிகள் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 24, 2024 02:10 AM
தேனாம்பேட்டை மண்டலத்தில், 156.68 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால் துார் வாரும் பணி நடைபெற்று வரும் நிலையில், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில், 2,632 கி.மீ., நீளத்திற்கு வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் துார் வாருவது வழக்கம். அதன்படி தற்போது, அனைத்து மண்டலங்களிலும் துார் வாரும் பணியை, மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, 156.68 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகாலை துார்வாரும் பணியை, ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், 109வது வார்டில் மட்டும், இன்னும் பணிகள் துவக்கப்படவில்லை. ஆனால், அதே மண்டலத்திற்கு உட்பட்ட, 126வது வார்டில், பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துார் வாரும் இதுபோன்ற பணிகளில் பொறியாளர்கள் மெத்தனமாக இருப்பதால் தான், சாதாரண மழைக்கு கூட, சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி விடுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், பெரிய அளவு மழை வருவதற்குள், மழைநீர் வடிகாலை துார் வாரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் -