/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மது குடிப்பதில் தகராறு நண்பருக்கு பாட்டிலால் அடி மது குடிப்பதில் தகராறு நண்பருக்கு பாட்டிலால் அடி
மது குடிப்பதில் தகராறு நண்பருக்கு பாட்டிலால் அடி
மது குடிப்பதில் தகராறு நண்பருக்கு பாட்டிலால் அடி
மது குடிப்பதில் தகராறு நண்பருக்கு பாட்டிலால் அடி
ADDED : ஜூன் 24, 2024 02:10 AM
அமைந்தகரை:அமைந்தகரை, 'ஏ' பிளாக், எம்.எம்., காலனியைச் சேர்ந்தவர் சிதம்பரம், 40; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, நண்பர் பாலு மகேந்திரன், 40, என்பவருடன், அதே பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, மது பாட்டிலில் இருந்த சரக்கை சிதம்பரம் குடித்து காலி செய்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த பாலு மகேந்திரன், சிதம்பரத்தை தகாத வார்த்தைகளால் பேசி, மது பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த சிதம்பரம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, அமைந்தகரை காவல் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.