/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரவுடிக்கு வெட்டு: நால்வர் கும்பல் கைது ரவுடிக்கு வெட்டு: நால்வர் கும்பல் கைது
ரவுடிக்கு வெட்டு: நால்வர் கும்பல் கைது
ரவுடிக்கு வெட்டு: நால்வர் கும்பல் கைது
ரவுடிக்கு வெட்டு: நால்வர் கும்பல் கைது
ADDED : ஜூன் 12, 2024 12:36 AM
கொடுங்கையூர்,கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகர் ஹவுஸ்சிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜய், 22; பிரபல ரவுடி.
நேற்று முன்தினம் நள்ளிரவு செல்வகுமார் என்பவரின் வீட்டருகே நின்றிருந்த விஜயை, அங்கு வந்த ஆறு பேர் கும்பல் கத்தியால் வெட்டி தப்பியது.
இதில், தலை, கை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர். விஜய், அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமாரின் தங்கை தனலட்சுமியை காதலித்து வந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜயை செல்வகுமார் கண்டித்துள்ளார். இதனால், செல்வகுமாருக்கும், விஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக, கொருக்குப்பேட்டை, செல்வகுமார், 23, தன் கூட்டாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 19, வின்சென்ட், 25, பிரவீன்குமார், 21, ஆகியோருடன் சேர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் நான்கு பேரை நேற்று கைது செய்த போலீசார், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.