ADDED : ஜூன் 12, 2024 12:36 AM
மணலி, சென்னை, மணலி, குமரன் நகர், பாப்பாத்தி அம்பாள் தெருவைச் சேர்ந்தவர் மதன், 25; நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று கொடுங்கையூர், திருவள்ளூர் நகர், இரண்டாவது லிங்க் சாலை வழியாக, தன் நண்பரின் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவ்வழியே ஆட்டோவில் வந்த ஆறு பேர் கும்பல், மதனிடம் பணம், மொபைல்போன் கேட்டு மிரட்டினர்.
அவர் தர மறுக்கவே, மதனை கத்தியால் தலையில் வெட்டி விட்டு, அவரிடம் இருந்த 2,000 ரூபாய், மொபைல்போன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
பின், நண்பரின் உதவியுடன், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து, நேற்று கொடுங்கையூர் போலீசார், விசாரிக்கின்றனர்.