/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இடிந்து விழுந்த பகிங்ஹாம் கால்வாய் சுவர் வெள்ளம் பெருக்கெடுத்தால் அபாயம் இடிந்து விழுந்த பகிங்ஹாம் கால்வாய் சுவர் வெள்ளம் பெருக்கெடுத்தால் அபாயம்
இடிந்து விழுந்த பகிங்ஹாம் கால்வாய் சுவர் வெள்ளம் பெருக்கெடுத்தால் அபாயம்
இடிந்து விழுந்த பகிங்ஹாம் கால்வாய் சுவர் வெள்ளம் பெருக்கெடுத்தால் அபாயம்
இடிந்து விழுந்த பகிங்ஹாம் கால்வாய் சுவர் வெள்ளம் பெருக்கெடுத்தால் அபாயம்
ADDED : ஜூலை 27, 2024 12:57 AM

திருவொற்றியூர்,திருவொற்றியூர் குப்பை மேடு - எண்ணுார் முகத்துவாரம் வரை, 6 கி.மீ., துாரத்திற்கு பகிங்ஹாம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் ஒரு பக்கம் குடியிருப்பு பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படாதபடி, 12 அடி முதல் 15 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு பெரு மழை முதல் 2023ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு வரை, பகிங்ஹாம் கால்வாயின் தடுப்பு சுவரை மீறி வெள்ளம் ஆர்ப்பரித்து ஊருக்குள் புகுந்தது.
அதேநேரம், தடுப்பு சுவரால் வெள்ள பாதிப்பு வெகு குறைவாக இருந்தது. இந்த நிலையில், திருவொற்றியூர் குப்பைமேடு அருகே, 3-0 அடி துாரத்திற்கான தடுப்பு சுவர், இரு தினங்களுக்கு முன் இடிந்து, கால்வாய்க்குள் விழுந்தது.
அதனுடன் சேர்ந்து, மாநகராட்சியின் தெருவிளக்கு கம்பம் ஒன்றும், கால்வாய்க்குள் விழுந்துள்ளது.
இது குறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில், 'அவ்வழியே கனரக வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதால், பக்கவாட்டு தார்ச்சாலையில் அழுத்தம் ஏற்பட்டு, பலவீனம் காரணமாக தடுப்பு சுவர் இடிந்து விழுந்திருக்கிறது' என்றனர்.
திருவொற்றியூரை பொறுத்தவரை, வெள்ளக்காலங்களில் அதிகம் பாதிக்கப்படுவது, பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய ஏழாவது வார்டு. தற்போது, தடுப்புச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் உட்புகும் அபாயம் உள்ளது.
இரவு நேரத்தில், தெருவிளக்கு எரியாத சூழலில், சுவர் இல்லாததை அறியாத நிலையில், கனரக வாகனங்கள், பகிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு.
எனவே, போர்க்கால அடிப்படையில் தடுப்புச்சுவர் கட்டி, தெரு விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.