/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னையில் இன்று துவங்குகின்றன கார்ப்பரேட் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் சென்னையில் இன்று துவங்குகின்றன கார்ப்பரேட் ஒலிம்பிக்ஸ் போட்டிகள்
சென்னையில் இன்று துவங்குகின்றன கார்ப்பரேட் ஒலிம்பிக்ஸ் போட்டிகள்
சென்னையில் இன்று துவங்குகின்றன கார்ப்பரேட் ஒலிம்பிக்ஸ் போட்டிகள்
சென்னையில் இன்று துவங்குகின்றன கார்ப்பரேட் ஒலிம்பிக்ஸ் போட்டிகள்
ADDED : ஜூலை 27, 2024 12:55 AM

சென்னை, சென்னையில், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கான 'கார்ப்பரேட் ஒலிம்பிக்ஸ்' எனும் விளையாட்டு போட்டிகள் இன்று துவங்குகின்றன. கார்ப்பரேட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்படும் இப்போட்டிக்கான கோப்பைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது.
அதில், பார்ம் குரு அமைப்பின் நிறுவனர் சேஷசாய், புட் பாங்க் ஆப் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் சினேகா மோகன்தாஸ் ஆகியோர் கோப்பைகளை அறிமுகம் செய்தனர்.
கார்ப்பரேட் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாக இயக்குனர் ஜெயபாரதி கூறியதாவது:
பெரு நிறுவனங்களில் பணியாற்றுவோர், உடல் வலிமையை இழந்து வருகின்றனர். இதனால் மன அழுத்தம், துாக்கமின்மை, சோர்வு, தொற்றா நோய்கள் உள்ளிட்டவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு தீர்வு காணும் வகையில், இந்த ஒலிம்பிக் போட்டிகள், மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுகின்றன. நாளை (இன்று) துவங்கி செப்., 14ம் தேதி வரை நடக்கும்.
ஆண்கள், பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடக்கும். கால்பந்து, தடகளம், நீச்சல், நடை, ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள், சென்னையின் பல்வேறு இடங்களில் நடக்கின்றன.
இதில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், நிறுவனங்களின் பெயரில் விளையாடுவர். வெற்றி பெறும் வீரர், வீராங்கனையருக்கு பதக்கங்களும், ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த வெற்றியை பெறும் நிறுவனங்களுக்கு, அந்தந்த பிரிவில் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.