/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாலநாகாத்தம்மன் கோவிலில் 108 பால்குடம் அபிஷேகம் பாலநாகாத்தம்மன் கோவிலில் 108 பால்குடம் அபிஷேகம்
பாலநாகாத்தம்மன் கோவிலில் 108 பால்குடம் அபிஷேகம்
பாலநாகாத்தம்மன் கோவிலில் 108 பால்குடம் அபிஷேகம்
பாலநாகாத்தம்மன் கோவிலில் 108 பால்குடம் அபிஷேகம்
ADDED : ஜூலை 27, 2024 12:58 AM

அரும்பாக்கம், ஆடி மாதத்தை முன்னிட்டு, அரும்பாக்கம் பாலநாகாத்தம்மன் கோவிலில், அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது.
அரும்பாக்கம், பாலவிநாயகர் நகரிலுள்ள பாலநாகாத்தம்மன் கோவிலில், 34ம் ஆண்டு ஆடித் திருவிழா நேற்று துவங்கியது.
காலை, கணபதி ஹோமம், அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன், பிரசாத வினியோகமும் நடந்தது.
தொடர்ந்து, அதே பகுதியிலுள்ள ஜெய்நகர் ஆதிபராசக்தி கோவிலில் இருந்து, பெண்கள் 108 பால் குடம் எடுத்து சக்தி நகர், பிரகதீஸ்வர் நகர் வழியாக வந்து, பாலநாகாத்தம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
அம்மன் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். இன்று அன்னதானமும், நாளை சாத்துப்படி அலங்காரத்துடன் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது.