/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போலி ஆவணத்தில் நிலம் மோசடி அண்ணன், தங்கைக்கு '3 ஆண்டு' போலி ஆவணத்தில் நிலம் மோசடி அண்ணன், தங்கைக்கு '3 ஆண்டு'
போலி ஆவணத்தில் நிலம் மோசடி அண்ணன், தங்கைக்கு '3 ஆண்டு'
போலி ஆவணத்தில் நிலம் மோசடி அண்ணன், தங்கைக்கு '3 ஆண்டு'
போலி ஆவணத்தில் நிலம் மோசடி அண்ணன், தங்கைக்கு '3 ஆண்டு'
ADDED : ஜூலை 03, 2024 12:11 AM

சென்னை, போலி ஆவணம் வாயிலாக, 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்று மோசடி செய்த வழக்கில், அண்ணன், தங்கை உட்பட மூவருக்கு, தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரும்பாக்கம் கண்ணப்ப நாயக்கர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்,59. இவர் கடந்த 1981ல், அரும்பாக்கத்தில் உள்ள, 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3,250 சதுர அடி நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த லோகம்பாள்,60, மற்றும் அவரின் வாரிசுகளிடம் இருந்து வாங்கியுள்ளார்.
அந்த நிலம் குறித்து 2009ல், சந்திரசேகரன் வில்லங்க சான்று பார்த்த போது, போலி ஆவணங்கள் வாயிலாக வேறு நபருக்கு விற்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், சந்திரசேகரனுக்கு விற்ற நிலத்தை லோகம்பாள், ஜாபர்கான்பேட்டையில் வசிக்கும் அவரது மகன் பொன்னம்பலம், 45, சூளைமேடில் வசிக்கும் அவரது மகள் பூங்கொடி, 42, ஆகியோர், போலி ஆவணம் தயாரித்து வேறு நபருக்கு விற்றது தெரிந்தது.
இதற்கு, அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ராமச்சந்திரன், 68, என்பவர் மூளையாக செயல்பட்டுள்ளார்.
இதையடுத்து லோகம்பாள், பொன்னம்பலம், பூங்கொடி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர், கடந்த 2010ல் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்தனர்.
இதுதொடர்பான வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி., மற்றும் மத்திய குற்றப் பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு நேற்று முன்தினம், நீதிபதி செல்லப்பாண்டியன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பொன்னம்பலம், பூங்கொடி, ராமச்சந்திரன் ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 22,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணை காலத்தில் லோகம்பாள் இறந்ததால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.