Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில வாலிபால் போட்டியில் ஜேப்பியார் 'டாப்'

மாநில வாலிபால் போட்டியில் ஜேப்பியார் 'டாப்'

மாநில வாலிபால் போட்டியில் ஜேப்பியார் 'டாப்'

மாநில வாலிபால் போட்டியில் ஜேப்பியார் 'டாப்'

ADDED : ஜூலை 03, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
சென்னை, சேலஞ்சர்ஸ் வாலிபால் கிளப் சார்பில், அழகப்பா நினைவுக் கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி, விருத்தாசலத்தில் கடந்த நான்கு நாட்கள் நடந்தன.

பெண்களுக்கான இப்போட்டியில், ஜேப்பியார், பி.கே.ஆர்., - எஸ்.ஆர்.எம்., - சென்னை எஸ்.டி.ஏ.டி., ஆகிய நான்கு அணிகள் 'லீக்' முறையில் மோதின.

ஜேப்பியார் அணி, 23 - 25, 25 - 21, 25 - 19 என்ற கணக்கில், சென்னை எஸ்.டி.ஏ.டி., அணியையும், 25 - 19, 25 - 15 என்ற புள்ளிக்கணக்கில், ஈரோடு பி.கே.ஆர்., அணியையும் வீழ்த்தின.

கடைசி 'லீக்' ஆட்டத்தில், ஜேப்பியார் அணி, 25 - 20, 25 - 19 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணியையும் தோற்கடித்தன.

அனைத்து போட்டிகளின் முடிவில், ஜேப்பியார் முதலிடத்தையும், எஸ்.ஆர்.எம்., இரண்டாம் இடத்தையும், பி.கே.ஆர்., - சென்னை எஸ்.டி.ஏ.டி., அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடங்களையும் வென்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us