/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சகோதரிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சகோதரன் கத்தியால் குத்தி கொலை சகோதரிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சகோதரன் கத்தியால் குத்தி கொலை
சகோதரிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சகோதரன் கத்தியால் குத்தி கொலை
சகோதரிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சகோதரன் கத்தியால் குத்தி கொலை
சகோதரிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சகோதரன் கத்தியால் குத்தி கொலை
ADDED : ஜூன் 01, 2024 12:16 AM

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், மணவாள நகர் பகுதி எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த துரை மகன் சதீஷ், 27. இவரது சகோதரி ராஜேஸ்வரி, சுகாதாரத்துறையில் துாய்மை பணியாளராக உள்ளார்.
ராஜேஸ்வரிக்கும், உடன் பணிபுரியும் லட்சுமி என்பவருக்கும் பிரச்னை உள்ளது. இதையறிந்த சதீஷ், லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதி ஏரிக்கரையோரம் சதீஷ், அவரது நண்பர் முரளி ஆகியோர் நடந்து சென்றனர்.
அப்போது, சதீஷை வழிமறித்து, லட்சுமியின் மகன்கள் அஜீத், தினேஷ் ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டனர். பின், மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷை குத்தினர். தடுக்க வந்த, முரளியையும் குத்தினர்.
சதீஷ் அங்கேயே இறந்தார். படுகாயமடைந்த முரளி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மணவாள நகர் போலீசார், சதீஷ் சடலத்தை கைப்பற்றினர்.
வாலிபரை கொலை செய்த வழக்கில் தினேஷ், 19, அஜீத், 23, மற்றும் கீழ்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவர் என, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.