/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'யோகத்தான்' போட்டிக்கு 13ம் தேதி வரை முன்பதிவு 'யோகத்தான்' போட்டிக்கு 13ம் தேதி வரை முன்பதிவு
'யோகத்தான்' போட்டிக்கு 13ம் தேதி வரை முன்பதிவு
'யோகத்தான்' போட்டிக்கு 13ம் தேதி வரை முன்பதிவு
'யோகத்தான்' போட்டிக்கு 13ம் தேதி வரை முன்பதிவு
ADDED : ஜூன் 08, 2024 12:30 AM
சென்னை, உலக யோகா தினம், வரும் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, வரும் 16ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில், யோகத்தான் தொடர் சூரிய நமஸ்காரம் என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது.
அதாவது, சூரிய நமஸ்காரத்தின் 12 ஆசனங்கள் ஒரு சுற்றாக கணக்கிட்டு 30, 50, 108, 200 என்ற எண்ணிக்கையிலான சுற்றுகளுடன் யோகத்தான் போட்டிகள் நடக்க உள்ளன.
அன்று காலை, 8:30 மணிக்கு போட்டிகள் துவங்குகின்றன.
இதில் பங்கேற்று, சுற்றுகளை நிறைவு செய்வோருக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. பங்கேற்க விரும்புவோர் வரும் 13ம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு, 98401 12000, 98415 25694 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.