/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ராஜலட்சுமி நகருக்கு விமோசனம் குடிநீர் வாரியம், மாநகராட்சி நடவடிக்கை ராஜலட்சுமி நகருக்கு விமோசனம் குடிநீர் வாரியம், மாநகராட்சி நடவடிக்கை
ராஜலட்சுமி நகருக்கு விமோசனம் குடிநீர் வாரியம், மாநகராட்சி நடவடிக்கை
ராஜலட்சுமி நகருக்கு விமோசனம் குடிநீர் வாரியம், மாநகராட்சி நடவடிக்கை
ராஜலட்சுமி நகருக்கு விமோசனம் குடிநீர் வாரியம், மாநகராட்சி நடவடிக்கை
ADDED : ஜூன் 08, 2024 12:29 AM

மடிப்பாக்கம், மடிப்பாக்கம், ராஜலட்சுமி நகர், பிரதான சாலைகள், குறுக்கு தெருக்கள் என, 10க்கும் மேற்பட்ட தெருக்களில் 800க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. முதல் பிரதான சாலையில் மாநகராட்சி பூங்கா, குடிநீர் வாரிய அலுவலகம் உள்ளது.
ராஜலட்சுமி நகரில், ஓராண்டிற்கும் மேலாக மழைநீர் வடிகால் பணி, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
மழைநீர் வடிகால் பணி ஆங்காங்கே நிற்பதோடு, பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படவில்லை.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக, நகரின் பல சாலைகள் உள்வாங்கின; சகதி நிறைந்து காணப்பட்டன. குடியிருப்புவாசிகள் நடந்து செல்லவே முடியாத மோசமான நிலையும் ஏற்பட்டது.
ராஜலட்சுமி நகரில் இருந்து அம்பேக்தர் சாலைக்கு செல்லும் மூன்று வழித்தடங்களும் முழுமையாக மூடப்பட்டன. இதனால், அந்நகரில் எந்த வாகனமும் செல்ல முடியாமல், தனித்தீவானது.
இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் கூடிய விரிவான செய்தி நேற்று வெளியானது.
இதன் எதிரொலியாக, நேற்று காலை முதல் ராஜலட்சுமி சாலை சீரமைப்பு பணியில் சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியத்தினர் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.