பெரிய ஏரியை பாதுகாக்க விழிப்புணர்வு
பெரிய ஏரியை பாதுகாக்க விழிப்புணர்வு
பெரிய ஏரியை பாதுகாக்க விழிப்புணர்வு
ADDED : ஜூன் 24, 2024 02:21 AM

பெரும்பாக்கம்:மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கத்தில் 200 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரியும், 40 ஏக்கர் பரப்பில் சித்தேரியும் உள்ளது.
இந்த ஏரிகளைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆகாயத்தாமரை சூழ்ந்து, நீர் தேக்கத்திற்கு தடை ஏற்பட்டு உள்ளது. தவிர, லாரிகள் வாயிலாக கழிவு நீர் கலப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால், பெரும்பாக்கம் ஏரிகளை பாதுகாக்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், பெரும்பாக்கம் பசுமைப் பாசறை இயக்கம் சார்பில், 'பெரும்பாக்கம் ஏரியைக் காப்பாற்றுங்கள்' எனும் வாசகம் அடங்கிய 1,300 தபால் அட்டைகள், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு நேற்று அனுப்பப்பட்டது.