காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம்
காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம்
காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம்
ADDED : ஜூன் 24, 2024 02:21 AM

சென்னை:பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில் இருந்த, பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம் ஆகிய பகுதிகளை பிரித்து, 2020, டிச., 17ல் பெரும்பாக்கம் என்ற காவல் நிலையம் துவங்கப்பட்டது.
பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் உள்ள, ஆறு வீடுகளை ஒருங்கிணைத்து, அதில் காவல் நிலையம் செயல்படுகிறது.
வாரியம் 32 சென்ட் இடத்தை ஒதுக்கியது. கட்டடம் கட்ட, 1.85 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. மொத்தம் 2,360 சதுர அடி பரப்பில், இரண்டடுக்கு கட்டடமாக காவல் நிலையம் கட்டப்படுகிறது.
வெள்ளம் தேங்கும் பகுதியானதால், தரைத்தளத்தை வாகன நிறுத்தும் இடமாக கட்டமைக்கப்படுகிறது. கட்டுமான பணியை, ஓராண்டுக்குள் முடிக்கும் வகையில், காவலர் வீட்டுவசதி வாரியம் பணியை வேகப்படுத்தி வருகிறது.