/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூதாட்டியிடம் அத்துமீறல் ஆட்டோ ஓட்டுனர் கைது மூதாட்டியிடம் அத்துமீறல் ஆட்டோ ஓட்டுனர் கைது
மூதாட்டியிடம் அத்துமீறல் ஆட்டோ ஓட்டுனர் கைது
மூதாட்டியிடம் அத்துமீறல் ஆட்டோ ஓட்டுனர் கைது
மூதாட்டியிடம் அத்துமீறல் ஆட்டோ ஓட்டுனர் கைது
ADDED : ஜூலை 03, 2024 12:12 AM
சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்த, 70 வயது மூதாட்டி, தன் தங்கை வீட்டின் வாசலில் நேற்று முன்தினம் அதிகாலை உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். உடனே மூதாட்டி சத்தம் போடவே, மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதில், கை விரலில் காயமடைந்த மூதாட்டி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின் மருத்துவமனையிலிருந்து, அயனாவரம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மூதாட்டியின் தங்கையிடம் புகாரை பெற்று விசாரித்ததில், ஓட்டேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தனுஷ், 20, என்பவர், மூதாட்டியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.