/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வங்கியில் செலுத்திய பணத்தில் கள்ள நோட்டு அதிகாரியிடம் விசாரணை வங்கியில் செலுத்திய பணத்தில் கள்ள நோட்டு அதிகாரியிடம் விசாரணை
வங்கியில் செலுத்திய பணத்தில் கள்ள நோட்டு அதிகாரியிடம் விசாரணை
வங்கியில் செலுத்திய பணத்தில் கள்ள நோட்டு அதிகாரியிடம் விசாரணை
வங்கியில் செலுத்திய பணத்தில் கள்ள நோட்டு அதிகாரியிடம் விசாரணை
ADDED : ஜூலை 03, 2024 12:12 AM
அண்ணா நகர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் புஸ்பந்த்ரா, 34. இவர், அண்ணா நகரில் உள்ள மத்திய அரசு குடியிருப்பில் வசிக்கிறார். பிராட்வேயில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம், புஸ்பந்த்ரா, தன் மனைவியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்காக, அண்ணா நகர், ஐந்தாவது அவென்யூவில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கிக்கு சென்றார்.
வங்கியில், பணம் செலுத்துவதற்கான சீட்டை பூர்த்தி செய்து, ஐந்து லட்சம் ரூபாயை வங்கி ஊழியரிடம் கொடுத்துள்ளார். ஊழியர் பணத்தை சோதித்த போது, அவற்றில் ஆறு 500 ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, அண்ணா நகர் போலீசார் விசாரித்தனர். இதில், ராஜஸ்தானில் வசிக்கும் புஸ்பந்த்ராவின் தந்தை சிவசங்கர் சர்மா இதய பிரச்னையால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அவரது அறுவை சிகிச்சைக்காக, நண்பரிடம் பணத்தை கடனாக பெற்று, மனைவியின் வங்கிக் கணக்கில், புஸ்பந்த்ரா செலுத்தியது தெரிந்தது.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீசார், புஸ்பந்த்ராவின் நண்பர் உள்ளிட்டோரிடம் விசாரிக்கின்றனர்.