/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரசு பணிகளுக்கான மாதிரி தேர்வு அசத்தும் திருவொற்றியூர் கிளை நுாலகம் அரசு பணிகளுக்கான மாதிரி தேர்வு அசத்தும் திருவொற்றியூர் கிளை நுாலகம்
அரசு பணிகளுக்கான மாதிரி தேர்வு அசத்தும் திருவொற்றியூர் கிளை நுாலகம்
அரசு பணிகளுக்கான மாதிரி தேர்வு அசத்தும் திருவொற்றியூர் கிளை நுாலகம்
அரசு பணிகளுக்கான மாதிரி தேர்வு அசத்தும் திருவொற்றியூர் கிளை நுாலகம்
ADDED : ஜூன் 01, 2024 12:30 AM

திருவொற்றியூர், அரசு பணிகளுக்கான, மாதிரி தேர்வு முறையை திருவொற்றியூர் கிளை நுாலகம், சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம், சண்முகனார் பூங்கா அருகே, திருவொற்றியூர் கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது.
கடந்த, 1958ம் ஆண்டிலிருந்து செயல்படும் இந்நுாலகம், 2003ல், 760 சதுர அடி அளவிற்கு கட்டப்பட்டது. பின், 2015 ல், 1 கோடி ரூபாய் செலவில், நான்கு தளங்கள் வசதியுடன், 5,336 ச.அடி அளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
இங்கு, நாளிதழ்கள், பருவ இதழ்கள் படிக்கும் இடம், குழந்தைகள், சிறுவர்கள் புத்தக வாசிப்பிடம், கணினி அறை உட்பட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 13,500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட நுாலக அலுவலர் ராஜேஷ்குமார் முயற்சியில், திருவொற்றியூர் கிளை நுாலகம் உட்பட, மாவட்டத்தின் 17 நுாலகங்களில், டி.என்.பி.எஸ்.சி., அரசு பணிகளுக்கான தேர்வுக்கு, மாணவர்களை தயார்படுத்தும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்களுக்கு, 'நாமக்கல் டி.என்.பி.எஸ்.சி., சென்டர்' தயார் செய்யும், மாதிரி வினாத்தாள் நகல் எடுக்கப்பட்டு, 45 பக்கம் கொண்ட வினாத்தாள் மற்றும் ஓ.எம்.ஆர்., தாள் அச்சடிக்கப்பட்டு, மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக, பயிற்சி தேர்வு ஒன்றிற்கு, வினாத்தாள் அச்சடிக்க, 12,000 ரூபாய் செலவாகிறது. அந்த செலவை, திருவொற்றியூர் நலசங்கம், வாசகர் வட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்கின்றனர்.
திருவொற்றியூர் கிளை நுாலகத்தில், ஏப்., 1 - மே. 29 ம் தேதி வரை, ஆன்லைன் வாயிலாக 10, வினாத்தாள் வாயிலாக 10 என, 20 பயிற்சி தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தி மாணவர்கள் செய்துள்ள தவறை திருத்தும் வகையில், குழு கலந்தாலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் கிளை நுாலகத்தில் மட்டும், 65 - 70 பேர் உட்பட, 17 நுாலகங்களிலும், 450 மாணவ - மாணவியர்கள், இந்த பயிற்சி தேர்வின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
சேலத்தை சேர்ந்த நுாலக உறுப்பினர் ஏ.அருணாச்சலம் என்பவர் கூறியதாவது:
நான் எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி படித்துள்ளேன். நான்கு ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளுக்கு தயராகி வருகிறேன்.
முதலில், காஞ்சிபுரத்தில் தனியாக வகுப்பு சென்று படித்து வந்த நிலையில், நாளடைவில், திருவொற்றியூர் கிளை நுாலக பயிற்சி தேர்வுகள் குறித்து அறிந்து, இதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
தற்போது, ராயபுரத்தில் தங்கி, படிக்கிறேன். பயிற்சி தேர்வுகள் மிக பயனுள்ளதாக உள்ளது. இம்முறை நிச்சயம், அரசு தேர்வில் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.