/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கழிவுநீர் நிலையம் பணி துரிதப்படுத்தியது வாரியம் கழிவுநீர் நிலையம் பணி துரிதப்படுத்தியது வாரியம்
கழிவுநீர் நிலையம் பணி துரிதப்படுத்தியது வாரியம்
கழிவுநீர் நிலையம் பணி துரிதப்படுத்தியது வாரியம்
கழிவுநீர் நிலையம் பணி துரிதப்படுத்தியது வாரியம்
ADDED : ஜூன் 01, 2024 12:31 AM

கொளத்துார்,
சென்னை மாநகராட்சி, திரு.வி.க., நகர் மண்டலத்திற்குட்பட்ட 65வது வார்டு முருகன் நகரில் சாலையை மறித்து கழிவுநீரேற்று மையத்தை அமைத்துள்ளது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதுகுறித்து குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
முருகன் நகரில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் 20 தெருக்களின் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து பெரியார் நகர் கழிவுநீர் உந்து நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம், பெரியார் நகர் கழிவுநீர் உந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி தொடங்கியது. இதற்காக 44.26 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது.
அதற்கான வேலைகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பணி முடியும் நிலையில், பெரியார் நகர் கழிவுநீர் உந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பின், முருகன் நகரில் உள்ள உந்து நிலையம் முழுவதுமாக அகற்றப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.