/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ரிவர்ஸ்' வந்த லாரி மோதி கிளீனர் பலி 'ரிவர்ஸ்' வந்த லாரி மோதி கிளீனர் பலி
'ரிவர்ஸ்' வந்த லாரி மோதி கிளீனர் பலி
'ரிவர்ஸ்' வந்த லாரி மோதி கிளீனர் பலி
'ரிவர்ஸ்' வந்த லாரி மோதி கிளீனர் பலி
ADDED : ஜூன் 20, 2024 12:24 AM
மாதவரம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே, சென்னை பெருநகர லாரி நிறுத்த வளாகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, ஆந்திராவைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஜாபர் சாதிக்வாலி, 28, தனியார் நிறுவனத்திற்கான இயந்திர உதிரிபாகங்களை லாரியில் ஏற்றி உள்ளார். லாரியில் கிளீனராக ஷேக் மஹபூப், 65, என்பவர் இருந்தார்.
லாரியை, 'பார்க்கிங்' பகுதியில் நிறுத்த பின்னோக்கி இயக்கினார். அப்போது, லாரிக்கு பின்னால் நின்று, டிரைவருக்கு உதவிய கிளீனர் ஷேக் மஹபூப், எதிர்பாராதவிதமாக லாரிக்கு அடியில் சிக்கி, சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து விசாரித்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய ஜாபர் சாதிக்வாலியை கைது செய்தனர்.