/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோமாவில் மீண்ட வாலிபர் பலி காதலித்த சிறுமி தற்கொலை கோமாவில் மீண்ட வாலிபர் பலி காதலித்த சிறுமி தற்கொலை
கோமாவில் மீண்ட வாலிபர் பலி காதலித்த சிறுமி தற்கொலை
கோமாவில் மீண்ட வாலிபர் பலி காதலித்த சிறுமி தற்கொலை
கோமாவில் மீண்ட வாலிபர் பலி காதலித்த சிறுமி தற்கொலை
ADDED : ஜூன் 20, 2024 12:24 AM
புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவி, உடன் படித்த இவர் அப்துல் சாதிக் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அப்துல் சாதிக், 19. இவர், ஓராண்டுக்கு முன் தன் நண்பர்களுடன் பைக்கில் சென்றபோது பயங்கர விபத்தில் சிக்கினார். இதில், சுயநினைவை இழந்து கோமாவிற்கு சென்றார். பின், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்துல் சாதிக், ஆறு மாதங்களுக்கு முன் குணமடைந்தார்.
இந்த நிலையில், கல்லுாரி செல்ல பைக் வாங்கி தருமாறு பெற்றோரிடம் அப்துல் சாதிக் கேட்டுள்ளார். 10 நாட்களுக்கு முன், பெற்றோர் புது பைக் வாங்கி கொடுத்துள்ளனர். புதிய பைக்கிற்கு பதிவு எண் கூட வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 17ம் தேதி இரவு பைக்கில் எண்ணுார் விரைவு சாலை, சுதந்திரபுரம் பகுதியில் சென்ற போது அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அப்துல் சாதிக் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
இதையறிந்து மனமுடைந்த சிறுமி, நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.