வெள்ளீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா
வெள்ளீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா
வெள்ளீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா
ADDED : ஜூன் 20, 2024 12:23 AM
பூந்தமல்லி, மாங்காட்டில் பிரசித்திப் பெற்ற வெள்ளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா, ஜூன், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வெள்ளீஸ்வரர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா நடந்தது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் வெள்ளீஸ்வரர் எழுந்தருளி, நான்கு மாடவீதிகள் வழியாக உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.