/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிக்னலில் நின்ற வாகனங்களை இடித்து தள்ளிய கலவை லாரி சிக்னலில் நின்ற வாகனங்களை இடித்து தள்ளிய கலவை லாரி
சிக்னலில் நின்ற வாகனங்களை இடித்து தள்ளிய கலவை லாரி
சிக்னலில் நின்ற வாகனங்களை இடித்து தள்ளிய கலவை லாரி
சிக்னலில் நின்ற வாகனங்களை இடித்து தள்ளிய கலவை லாரி
ADDED : ஜூலை 19, 2024 12:18 AM
கோயம்பேடு, தண்டையார்பேட்டை நேரு நகரை சேர்ந்த ஓட்டுனர் சுரேஷ், 41. இவர் நேற்று முன்தினம் இரவு, கிண்டியில் இருந்து கான்கிரீட் கலவை லாரியை, கோயம்பேடு 100 அடி சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி ஓட்டி சென்றார்.
கோயம்பேடு கேம்ஸ் வில்லேஜ் சிக்னல் அருகே, லாரி திடீரென பிரேக் பிடிக்காமல் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது. அங்கு, சிக்னலில் நின்றிருந்த பஜாஜ் பல்சர் பைக் மீது மோதியது.
இதில், லாரியில் முன் பகுதியில் பைக் சிக்கியதால், அதை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த், 33 என்பவர் குதித்து, உயிர் தப்பினார்.
தொடர்ந்து முன் நோக்கி சென்ற லாரி, சிக்னலில் நின்றிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், எல்.பி.ஐ., ஆட்டோ, டொயோட்டா இன்னோவா கார், ஹூண்டாய் ஐ 20 கார், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார், டாடா மினி லோடு வேன், மற்றும் இரண்டு டாடா ஏஸ் லோடு ஆட்டோ ஆகிய வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின.
லாரி மோதிய ஆட்டோவில் பயணித்த மணலி ராஜா தோட்டத்தை சேர்ந்த ஜான், 40 மற்றும் வியாசர்பாடி பொன்னியம்மன் தெருவை சேர்ந்த மணிமாறன், 37 ஆகிய இருவரும் காயங்களுடன் தப்பினர்.
அக்கம்பக்கத்தவர்கள் காயமடைந்த மூவரையும், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரியில் இருந்து தப்பி ஓட முயன்ற ஓட்டுநர் சுரேஷை, அங்கு கூடியிருந்தோர் மடக்கி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த விபத்தால், கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.