/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அலுமினிய பாத்திரத்தில் சிக்கி தவித்த 3 வயது குழந்தை அலுமினிய பாத்திரத்தில் சிக்கி தவித்த 3 வயது குழந்தை
அலுமினிய பாத்திரத்தில் சிக்கி தவித்த 3 வயது குழந்தை
அலுமினிய பாத்திரத்தில் சிக்கி தவித்த 3 வயது குழந்தை
அலுமினிய பாத்திரத்தில் சிக்கி தவித்த 3 வயது குழந்தை
ADDED : ஜூலை 19, 2024 12:17 AM

தண்டையார்பேட்டை,தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 28. இவரது 3 வயது ஆண் குழந்தை நிக்லேஷ், நேற்று முன்தினம் மாலை, வீட்டருகே விளையாடினான்.
அப்போது, அங்கிருந்த ஒரு அலுமினிய பாத்திரத்தில் அமர்ந்த நிலையில், குழந்தை சிக்கிக் கொண்டு தவித்துள்ளான். இதை பார்த்த பெற்றோர், குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை. உடனே, முல்லை நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாத்திரத்தை பிரத்யேக கருவியால் கத்தரித்து, அரை மணி நேர போராட்டத்திற்குப் பின், குழந்தையை காயமின்றி மீட்டனர்.