/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரசு நிலம் தனியாருக்கு பட்டா ரத்து செய்ய கலெக்டருக்கு கடிதம் அரசு நிலம் தனியாருக்கு பட்டா ரத்து செய்ய கலெக்டருக்கு கடிதம்
அரசு நிலம் தனியாருக்கு பட்டா ரத்து செய்ய கலெக்டருக்கு கடிதம்
அரசு நிலம் தனியாருக்கு பட்டா ரத்து செய்ய கலெக்டருக்கு கடிதம்
அரசு நிலம் தனியாருக்கு பட்டா ரத்து செய்ய கலெக்டருக்கு கடிதம்
ADDED : ஜூலை 19, 2024 12:18 AM
மதுரவாயல், மதுரவாயல் வரலட்சுமி நகர் பொது உபயோக இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து ஆணை வழங்குமாறு, கலெக்டர், தாசில்தாருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வளசரவாக்கம் மண்டலம் 144வது வார்டு மதுரவாயலில், கடந்த 1973ம் ஆண்டு டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற்ற வரலட்சுமி நகர் உள்ளது. இந்த நகரை உருவாக்கிய போது, பொது பயன்பாட்டிற்காக சில இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அங்கு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இப்பகுதி, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து உள்ளது.
இந்நிலையில், வரலட்சுமி நகரில் இருந்த 50 அடி சாலை மற்றும் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள், ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரையடுத்து, கடந்த 2014ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
தற்போது, வரலட்சுமி நகரில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு, கடந்த 2ம் தேதி வருவாய் துறை சார்பில், தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது.
வருவாய் துறை அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு, தனியாருக்கு பட்டா வழங்கியதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து நம் நாளிதழில், செய்தி வெளியானது. இதையடுத்து, பொது பயன்பாடு இடத்திற்கு வழங்கப்பட்ட 4,441 சதுர அடி இடத்திற்கான பட்டாவை ரத்து செய்ய கோரி, சென்னை கலெக்டர், மதுரவாயல் தாசில்தார் ஆகியோருக்கு, மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.