9 நாள் குழந்தை பலி போலீசார் விசாரணை
9 நாள் குழந்தை பலி போலீசார் விசாரணை
9 நாள் குழந்தை பலி போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 11, 2024 12:04 AM
வியாசர்பாடி, சூளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பிரதிஷ்டா, வியாசர்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகார்:
வியாசர்பாடி, சுந்தரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார்; கூலித்தொழிலாளி. இவரது மனைவிக்கு 1ம் தேதி பெண்குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 7ம் தேதி வீட்டில் குழந்தையை துாங்க வைத்து விட்டு வெளியே சென்றுள்ளனர். பின் திரும்பி வந்து பார்த்தபோது, குழந்தையின் குடல் சரிந்து காயத்துடன் இருந்ததாகவும், உடனே எழும்பூர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும் தெரிவித்தனர்.
பின், நேற்று குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. எனவே, 9 நாள் குழந்தைக்கு வயிற்றில் எப்படி காயம் வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
உயிரிழந்த குழந்தையின் தந்தை ராஜ்குமாருக்கு, ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.