/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வாலிபரை தீர்த்துக்கட்ட பதுங்கிய 4 பேர் கைது வாலிபரை தீர்த்துக்கட்ட பதுங்கிய 4 பேர் கைது
வாலிபரை தீர்த்துக்கட்ட பதுங்கிய 4 பேர் கைது
வாலிபரை தீர்த்துக்கட்ட பதுங்கிய 4 பேர் கைது
வாலிபரை தீர்த்துக்கட்ட பதுங்கிய 4 பேர் கைது
ADDED : ஜூன் 24, 2024 02:06 AM
ஓட்டேரி:புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையைச் சேர்ந்த நியாமத்துல்லா, 23; பி.வி.காலனியைச் சேர்ந்தவர் சலாவுதீன் ரபீக், 28. பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் அல்தாப் பாஷா, 21, சனாவுல்லா, 28, பழைய குற்றவாளிகளான இவர்கள் நால்வரும் நண்பர்கள்.
நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி, தர்கா தெரு அருகே, இவர்கள் கத்திகளுடன் இருந்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஓட்டேரி போலீசாரிடம் சிக்கினர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த முஸ்தப் அத்து, 33, என்பவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மூன்று கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.