/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 20 மாடி ஐ.டி., வளாகம், அடுக்குமாடி குடியிருப்பு எழும்பூரில் ரூ.350 கோடி முதலீட்டில் அமைகிறது 20 மாடி ஐ.டி., வளாகம், அடுக்குமாடி குடியிருப்பு எழும்பூரில் ரூ.350 கோடி முதலீட்டில் அமைகிறது
20 மாடி ஐ.டி., வளாகம், அடுக்குமாடி குடியிருப்பு எழும்பூரில் ரூ.350 கோடி முதலீட்டில் அமைகிறது
20 மாடி ஐ.டி., வளாகம், அடுக்குமாடி குடியிருப்பு எழும்பூரில் ரூ.350 கோடி முதலீட்டில் அமைகிறது
20 மாடி ஐ.டி., வளாகம், அடுக்குமாடி குடியிருப்பு எழும்பூரில் ரூ.350 கோடி முதலீட்டில் அமைகிறது
ADDED : ஜூன் 08, 2024 12:11 AM

சென்னை, சென்னை எழும்பூரில், 20 மாடி ஐ.டி., தொழில்களுக்கான வளாகம், அடுக்குமாடி குடியிருப்புகள், 350 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ளது.
சென்னை, எழும்பூர் ரயில் நிலையம், 760 கோடி ரூபாயில் மறுமேம்பாடு செய்யப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து, எழும்பூர் ரயில் நிலையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். இதனால், எழும்பூர் ரயில் நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில், புதிய அடுக்குமாடி திட்டங்கள் வருகை அதிகரித்துள்ளன.
இங்கு, ஏற்கனவே உள்ள அடுக்குமாடி வளாகங்களை இடித்து, அதிக தளங்களை உடைய பெரிய வளாகங்கள் கட்ட, கட்டுமான நிறுவனங்கள் ஆர்வமாக இறங்கிஉள்ளன.
இந்த வகையில், இங்கு தனியார் நிலம் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
எழும்பூர் ரயில் நிலையம், பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையே, பழைய ரயில்வே காலனி இருந்தது. மொத்தம், 6.23 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த நிலம், ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமானது.
இந்த வாரியம், நிலங்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியாருக்கு வழங்க முன்வந்துள்ளது.
இதன் அடிப்படையில், இந்நிலத்தை பெற்று, இங்கு 20 மாடி ஐ.டி., சார்ந்த தொழில்களுக்கான வளாகம், 15 மற்றும் 12 மாடி குடியிருப்பு வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. எம்.ஜி.எம்., குழுமம் இதில், முதலீடு செய்ய முன்வந்து உள்ளது.
அரசு மற்றும் தனியார் முதலீட்டில், 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் தெரிவித்தனர்.