ADDED : ஜூன் 06, 2024 12:29 AM
ஆவடி, தனியார் வங்கி ஊழியரின் வீட்டில், நகை திருடி விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்தவர் பரசுராமன், 53; தனியார் வங்கி மேலாளர்.
இவர், கடந்த மாதம் 4ம் தேதி, தன் குடும்பத்தினருடன் கோயம்புத்துாருக்கு சென்றார்.
அங்கிருந்து வீட்டிற்கு திரும்பிய போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடியது தெரிந்தது.
இது குறித்த புகாரின்படி, சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலம், தடா பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 25, எண்ணுாரைச் சேர்ந்த முகமது கனி, 25, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருடிய நகையை பொன்னேரியைச் சேர்ந்த அசோக், 23, அவரது மனைவி இந்துமதியிடம், 22, விற்றது தெரிந்தது. நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 20 சவரன் நகையை மீட்டனர்.