/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குன்றத்துாரில் சேக்கிழார் பிரம்மோற்சவ விழா குன்றத்துாரில் சேக்கிழார் பிரம்மோற்சவ விழா
குன்றத்துாரில் சேக்கிழார் பிரம்மோற்சவ விழா
குன்றத்துாரில் சேக்கிழார் பிரம்மோற்சவ விழா
குன்றத்துாரில் சேக்கிழார் பிரம்மோற்சவ விழா
ADDED : ஜூன் 06, 2024 12:30 AM

குன்றத்துார், குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, மூன்று நாட்கள் அரசு விழா நடந்தது. கடைசி நாளான நேற்று முன்தினம் சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகளில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
குன்றத்துாரில் சேக்கிழார் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஜூன் 2 முதல் 4ம் தேதி வரை, மூன்று நாட்கள், சேக்கிழார் அரசு விழா நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம், மங்கல இசை, நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, ஹிந்து அறநிலையத் துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனார் சொற்பொழிவு, ராமலிங்கம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன.
திருமுறை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, குன்றத்துார் வள்ளலார் தொண்டு அறக்கட்டளை தலைவர் எழிலரசன், சான்றிதழ், பரிசுகளை வழங்கினார்.
தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானபிரகாசம் ஆசியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.