ADDED : ஜூன் 01, 2024 12:22 AM
குன்றத்துார்,தாம்பரம் அடுத்த, சோமங்கலம், நடுவீரப்பட்டு, நல்லுார், காட்டரம்பாக்கம் உள்ளிட்ட மளிகை கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து சோமங்கலம் போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்தனர்.
மேலும், 11 கடைகளுக்கு, நேற்று சென்ற காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அக்கடைகளின் உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கினர். தவிர, தலா 30,000 ரூபாய் அபராதம் விதித்து, தற்காலிகமாக 15 நாட்களுக்கு 'சீல்' வைத்தனர்.