/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சபரி சாலையில் உள்வாங்கிய 'மேன்ஹோல்' உயிர் பலி வாங்கியும் சீரமைக்காமல் மெத்தனம் சபரி சாலையில் உள்வாங்கிய 'மேன்ஹோல்' உயிர் பலி வாங்கியும் சீரமைக்காமல் மெத்தனம்
சபரி சாலையில் உள்வாங்கிய 'மேன்ஹோல்' உயிர் பலி வாங்கியும் சீரமைக்காமல் மெத்தனம்
சபரி சாலையில் உள்வாங்கிய 'மேன்ஹோல்' உயிர் பலி வாங்கியும் சீரமைக்காமல் மெத்தனம்
சபரி சாலையில் உள்வாங்கிய 'மேன்ஹோல்' உயிர் பலி வாங்கியும் சீரமைக்காமல் மெத்தனம்
ADDED : ஜூன் 01, 2024 12:21 AM

பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம் சபரி சாலை, பேருந்து போக்குவரத்தின் பிரதான சாலையாக உள்ளது. தாம்பரம், மேடவாக்கம் கூட்டுசாலை, கீழ்கட்டளை உள்ளிட்ட தடங்களின் மாநகர பேருந்துகள், வேளச்சேரி செல்ல இச்சாலைதான் பிரதான வழித்தடம்.
தாம்பரம் - வேளச்சேரி சாலையில் இருந்து பரங்கிமலை - மேடவாக்கம் சாலைக்கு இடையே உள்ள மடிப்பாக்கம் பிரதான சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், சபரி சாலை மட்டும் விரிவாக்கம் செய்யப்படாமல் விடப்பட்டது.
ஏற்கனவே, இச்சாலை குறுகலானது. இதன் நடுவே, பாதாள சாக்கடை செல்கிறது. அதன் 'மேன்ஹோல்' மூடிகள், பல இடங்களில் உடைந்து காணப்படுகின்றன.
கனரக வாகனங்கள் செல்லும் இச்சாலையில் 'மேன்ஹோல்' மூடிகள், தரமாக அமைக்கவில்லை. அதன் காரணமாக பல இடங்களில் உள்வாங்கி, சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத் துறை என மாறி, மாறி புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதனால், இந்த பள்ளத்தில் சிக்கி, வாகனத்தில் செல்வோர் விழுந்து, விபத்துக்களை சந்தித்துள்ளனர்.
கடந்த மாதம் 17ம் தேதி, இச்சாலையில் உள்ள மேன்ஹோல் பள்ளத்தால் விபத்தில் சிக்கி, மடிப்பாக்கம், கண்ணகி தெருவைச் சேர்ந்த செந்தில்குமார், 46, என்ற மின் வாரிய ஊழியர் பலியானார்.
இந்த சம்பவம் நிகழ்ந்து, 15 நாட்களுக்கு மேல் ஆகியும், சம்பந்தப்பட்ட துறையினர் யாரும் பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடியை சீரமைக்க முயற்சி செய்யவில்லை. அடுத்த உயிர் பலியாகும் முன், சபரி சாலையில் உள்ள மேன்ஹோல் மூடிகளை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
-- நமது நிருபர் --