/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வேடந்தாங்கல் மாணவர் விடுதிக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?வேடந்தாங்கல் மாணவர் விடுதிக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
வேடந்தாங்கல் மாணவர் விடுதிக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
வேடந்தாங்கல் மாணவர் விடுதிக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
வேடந்தாங்கல் மாணவர் விடுதிக்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
ADDED : ஜன 30, 2024 08:53 PM

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் மாணவர் விடுதி கட்டடம் இருந்தது.
இந்த விடுதி கட்டடம் பழமையானதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
தற்காலிகமாக, சித்தாத்துார் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில், வாடகை கட்டணத்தில் இயங்கி வருகிறது.
இதில், 25க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, கல்வி பயின்று வருகின்றனர். தற்காலிக வாடகை கட்டடத்தில், போதிய இடவசதி இல்லை. மேலும், பள்ளியிலிருந்து விடுதி, 2 கி.மீ., துாரத்திற்கும் மேல் உள்ளது. இதனால், மாணவர்கள் நடந்து சென்று வருகின்றனர்.
பழைய கட்டடத்தை இடித்து இரண்டு ஆண்டுகளைக் கடந்தும், புதிதாக விடுதி கட்டடம் அமைக்கப்படாமல் உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விடுதி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.