Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மும்பைக்கு ரெட் அலர்ட்; பல இடங்களில் சூழ்ந்தது வெள்ள நீர்!

மும்பைக்கு ரெட் அலர்ட்; பல இடங்களில் சூழ்ந்தது வெள்ள நீர்!

மும்பைக்கு ரெட் அலர்ட்; பல இடங்களில் சூழ்ந்தது வெள்ள நீர்!

மும்பைக்கு ரெட் அலர்ட்; பல இடங்களில் சூழ்ந்தது வெள்ள நீர்!

UPDATED : மே 26, 2025 02:09 PMADDED : மே 26, 2025 11:21 AM


Google News
Latest Tamil News
மும்பை: மும்பை மாநகரம், தானே, ராய்கட் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என்பதால், 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

மும்பையில், கடந்த 3 மணி நேரத்தில் 250 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

கேரளா, மும்பை, மஹாராஷ்டிரா, தெற்கு ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மஹாராஷ்டிரா, தானே, பால்கர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.மும்பை மாநகரம், தானே, ராய்கட் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என்பதால், 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

விரைவு ரயில்கள் சுமார் பத்து நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்பட்டன. நேற்று இரவு மும்பையில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

காற்று வீசும்

60 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மும்பை மக்கள் உஷாராக இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மும்பையில் பல்வேறு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு மஹாராஷ்டிராவில், புனே, கோலாப்பூர், சதாரா மற்றும் அகமதுநகர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. மே 26ம் தேதி ரோஸி, மும்பை, தானே, ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மஹாராஷ்டிராவில் பருவமழை முன்பே துவங்கி விட்டதால், மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us