/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ திறக்கப்படாத மதி அங்காடி சுற்றுலா பயணியர் ஏமாற்றம் திறக்கப்படாத மதி அங்காடி சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
திறக்கப்படாத மதி அங்காடி சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
திறக்கப்படாத மதி அங்காடி சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
திறக்கப்படாத மதி அங்காடி சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
ADDED : ஜூன் 06, 2025 01:32 AM

மதுராந்தகம்:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும், 80,000க்கும் அதிகமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
இங்கு, மகளிர் குழுவினர் தயாரிக்கும் சத்து மாவு, ஊறுகாய், சிறுதானிய உணவுகள், வற்றல், மண் பாண்டங்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் வகையில்,'மதி அங்காடி' அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது. இதனால், சுற்றுலா பயணியருக்கு குறைந்த விலையில் மேற்கண்ட பொருட்கள் கிடைக்குமென வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து, நம் நாளிதழிலும் செய்தி வெளியானது.
இதையடுத்து, வேடந்தாங்கல் பறவைகள் சரணாயத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், 2024 -25ம் நிதியாண்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மதி அங்காடி அமைக்கப்பட்டு உள்ளது.
கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்தும், இந்த மதி அங்காடி திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.
இதனால், சுற்றுலா பயணியருக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
எனவே, கலெக்டர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிதாக கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ள மதி அங்காடியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.