/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ லட்சுமி தீர்த்த குளத்தில் நீர் வரத்து கால்வாயை சீரமைக்க கோரிக்கை லட்சுமி தீர்த்த குளத்தில் நீர் வரத்து கால்வாயை சீரமைக்க கோரிக்கை
லட்சுமி தீர்த்த குளத்தில் நீர் வரத்து கால்வாயை சீரமைக்க கோரிக்கை
லட்சுமி தீர்த்த குளத்தில் நீர் வரத்து கால்வாயை சீரமைக்க கோரிக்கை
லட்சுமி தீர்த்த குளத்தில் நீர் வரத்து கால்வாயை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2025 01:44 AM

திருப்போரூர்:வேதகிரீஸ்வரர் கோவிலில் உள்ள லட்சுமி தீர்த்த குளத்தில் சீரமைப்பு பணி நடந்துவரும் நிலையில், நீர் வரத்து மற்றும் உபரிநீர் வெளியேறும் கால்வாயையும் சீரமைக்க வேண்டும் என, பதர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் மலைக் கோவில் உள்ளது. இத்தலத்தைச் சுற்றி, சங்கு தீர்த்தம், ரிஷப தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், நந்தி தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், இந்திர தீர்த்தம், சம்ப தீர்த்தம், வசிஷ்டர் தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், கவுசிக தீர்த்தம், ருத்திரகோடி தீர்த்தம்உள்ளிட்ட தீர்த்த குளங்கள் உள்ளன.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள், இந்த தீர்த்தக் குளங்களில் நீராடி, சுவாமியை வழிபடுவது வழக்கம்.
இந்த குளங்கள், போதிய பராமரிப்பின்றி, சீரழிந்தன.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையடுத்து தற்போது தீர்த்த குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வேதகிரீஸ்வரர் தாழக்கோவில் எதிரே உள்ள லட்சுமி தீர்த்தம் குளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பக்தர்களின் பல்வேறு கோரிக்கையை ஏற்று திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது 1.30 கோடி ரூபாய் மதிப்பில் குளத்தை துார்வாரி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி தீவிரமாக நடக்கிறது.
அதேநேரத்தில் , இக்குளத்தின் நீர்வரத்து கால்வாய் மற்றும் உபரிநீர் வெளியேறும் கால்வாய்களையும் நிதி ஒதுக்கி துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பக்தர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.