/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு பள்ளி சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை அரசு பள்ளி சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை
அரசு பள்ளி சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை
அரசு பள்ளி சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை
அரசு பள்ளி சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2025 01:45 AM

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், எல்.எண்டத்துார் ஊராட்சியில், உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ ---மாணவியர் பயின்று வருகின்றனர்.
பள்ளி நுழைவு வாயில் அருகில், சுற்றுசுவர் சேதமடைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் பள்ளி நுழைவுவாயில் பகுதியில், 5 லட்சம் மதிப்பில் மழைநீர் செல்ல கல்வெட்டு அமைக்கப்பட்டது.
பள்ளி உள்ளே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்ல, சேதம் அடைந்த சுற்றுசுவரை இடித்து பெரிதுபடுத்தி சென்று வந்தனர். கல்வெட்டுப் பணி முழுமை அடைந்த நிலையில், சுற்றுசுவர் தற்பொழுது வரை சீரமைக்கப்படவில்லை.
அதனால், இரவு நேரம் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில், சில இளைஞர்கள் புகுந்து, பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அதேபோல், இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் குடிமகன்கள் புகுந்து மது அருந்தி விட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு செல்கின்றனர்.
எனவே, சேதமடைந்த சுற்றுசுவரை சீரமைக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.