/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கல்பட்டில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு செங்கல்பட்டில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு
செங்கல்பட்டில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு
செங்கல்பட்டில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு
செங்கல்பட்டில் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு
ADDED : ஜூன் 16, 2025 11:48 PM

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பா.ம.க., வழக்கறிஞர் சக்ரவர்த்தி என்பவர் கடந்த 11ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை கண்டித்து செங்கல்பட்டு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.
மதுராந்தகம் -- செங்கல்பட்டு சாலையில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். பொது வாழ்வில் இருக்கும் வழக்கறிஞர்களை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.