/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க கோரிக்கை சாலை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க கோரிக்கை
சாலை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க கோரிக்கை
சாலை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க கோரிக்கை
சாலை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2025 11:48 PM

செய்யூர், நெடுஞ்சாலை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் - - வந்தவாசி -- சேத்துப்பட்டு --- போளூர் வரையிலான 109 கி.மீ., சாலையை இருவழித்தடமாக மாற்ற 603 கோடி ரூபாய் மதிப்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன், மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 கி.மீ., நீளமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 72 கி.மீ., நீளமும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கத்திற்கு பல்வேறு இடங்களில் இடையூறாக இருந்த பயணியர் நிழற்குடைகள் இடித்து அகற்றப்பட்டன. செய்யூர் பகுதியில் பொலம்பாக்கம், சித்தாமூர், காட்டுதேவாதுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை விரிவாக்கப்பணிகள் முடிந்த உடன் கழிப்பறையுடன் கூடிய புதிய பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
நிழற்குடை அருகே அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் செயல்படாமல் பூட்டியே உள்ளதால், பேருந்திற்காக காத்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பூட்டி உள்ள கழிப்பறைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.